முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: நோய் தடுப்பு பணிக்கு ரூ1.23 கோடி ஒதுக்கீடு

புதன்கிழமை, 25 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, வரும் 1-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்படவுள்ளனர். 

இதனிடையே பள்ளிகளை திறக்கும் முன்பே தகுந்த நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கென மாநிலம் முழுவதும் உள்ள 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ2,000 வீதம் ரூ1.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விபரம் வருமாறு:-

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயிலும் 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மட்டும் வரும் 1-ம் தேதி திறக்கப்படவுள்ளது. மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையிலும், மகிழ்வுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் கழிவறைகள் போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ1.23 கோடி நிதி பரிந்துரைக்கப்படுகிறது.

இவற்றில் முதற்கட்டமாக பள்ளி ஒன்றுக்கு ரூ1,000 வீதம் 6,177 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ61.77 லட்சம் மட்டும் விடுவிக்கப்படுகிறது. இந்த நிதியினை முறையாக செலவு செய்ய வேண்டும். மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சி.இ.ஓ., டி.இ.ஓ., பி.இ.ஓ., ஏ.டி.பி.சி., ஏ.பி.ஓ., இ.டி.சி. மற்றும் பி.ஆர்.டி.இ. ஆகியோர் பள்ளிகள் தூய்மை செய்யப்பட்டதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த நிதி மூலம் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை கொண்டு, பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை, பள்ளிகள் திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமித்து மேற்பார்வையிடச் செய்ய வேண்டும். சுகாதாரத் துறை வாயிலாக வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து