முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரை சந்திப்பது புது நம்பிக்கை கொடுக்கும்: ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் பேட்டி

சனிக்கிழமை, 24 மே 2025      இந்தியா
Balgam Attack-2025-04-24

Source: provided

கான்பூர் : நாட்டுக்காக செய்யப்படும் தியாகங்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது புது நம்பிக்கையை கொடுப்பதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்.,22ம் தேதி நடந்த கோர சம்பவமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது, திருமணமாகி இரு மாதங்களே ஆன அசன்யா திவேதியின் கண்முன்னே, அவரது கணவன் ஷூபம் திவேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சடலத்தின் அருகே அசன்யா அமர்ந்து இருந்த போட்டோ நெஞ்சை ரணமாக்கியது.

இதனிடையே, பிரதமர் மோடி வரும் 30ம் தேதி கான்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ஷுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் கூறியதாவது; கான்பூர் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று எம்.பி., ரமேஷ் அவஸ்தியிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த சூழலில் எங்களை சந்திக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. ஷூபமின் மரணத்தை தியாகச்செயலாக அறிவிக்க விரும்புகிறோம். நாட்டுக்காக செய்யப்படும் தியாகங்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் பிரதமர் மோடி எங்களின் கோரிக்கையை ஏற்பார் என்று நம்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து