எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : மெதுவாகப் பந்து வீசியதாகக் கூறி பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளின் கேப்டன்கள் ரஜத் படிதார் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டத்தில்...
நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் லீக் சுற்றின் 7 போட்டிகளுக்கு முன்னதாகவே, குஜராத், பஞ்சாப், பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இருப்பினும், முதலிரண்டு இடங்களைப் பிடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள எக்கானா மைதானத்தில் நடந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி பெங்களூருவை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது.
அபராதம்...
இந்தப் போட்டியில் ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்தத் தொடரில் முதல் முறையாக ஐ.பி.எல். விதியை மீறி மெதுவாகப் பந்து வீசியதாகக் கூறி ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், போட்டியில் பெங்களூரு அணியின் பொறுப்பு கேப்டனாக ஜிதேஷ் சர்மா செயல்பட்டிருந்தாலும், அவருக்குப் பதிலாக ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 2-வது முறையாக இந்தத் தொடரில் மெதுவாகப் பந்து வீசியதாகக் கூறி ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரு அணியில் உள்ள வீரர்கள், மாற்றுவீரர்கள் ஆகியோருக்கு போட்டி கட்டணத்திலிருந்து ரூ.6 லட்சம் அல்லது 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


