முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்முறையாக ரஷ்யா-உக்ரைன் இடையே 390 கைதிகள் பரிமாற்றம்

சனிக்கிழமை, 24 மே 2025      உலகம்
Jelensky 2024-05-04

Source: provided

ரஷ்யா : ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந்த வாரம் முதல்முறையாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்முறையாக நேற்றுமுன்தினம் மிகப் பெரியளவில் போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றது. இதில், இருநாடுகளும் தலா 390 போர்க் கைதிகளை விடுவித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் மற்றும் ரஷ்யாவால் சிறைப்படிக்கப்பட்ட தலா 270 வீரர்கள் மற்றும் 120 பொது மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விடுதலையான ரஷ்ய வீரர்கள் பெலாரஸ் நாட்டின் பகுதியில் ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்களுக்கும் மருத்துவ மற்றும் மனநல உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட போர்க் கைதிகள் பரிமாற்றத்தில், 1000-க்கு 1000 எனும் கொள்கையின் அடிப்படையில், 390 உக்ரைன் நாட்டினர் தாயகம் திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளார். இத்துடன், இந்தப் பரிமாற்றமானது வரும் மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் தொடரும் என அவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, துருக்கியில் கடந்த மே 16 ஆம் தேதியன்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருநாடுகளும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள தலா 1000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து