எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் (மே 25) மற்றும் நாளையும் (மே 26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தேனி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 3 நாட்களுக்கு முன் தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து சென்றது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெற்றது. இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்கிறது என்றும் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி ரத்தினகிரிக்கும், டபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற அளவிலேயே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 28-ம் தேதி வரை மித அளவிலான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டு உள்ள மற்றொரு செய்தியில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது. பொதுவாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில், 8 நாட்களுக்கு முன்பாக மே 24-ம் தேதியே (நேற்று) கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாகவும், வரும் 28-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "கேரளா மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. மார்ச் மாதம் முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் இயல்பைவிட 92 சதவீதம் அதிக அளவு மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் மே 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
அரபிக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளது. அரபிக் கடலில் நிலைக் கொண்டுள்ள தாழ்வு மண்டலம், தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும். 16 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் (மே 25) மற்றும் நாளையும் (மே 26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. நெல்லை, தேனி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
இந்நிலையில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25-05-2025 மற்றும் 26-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


