முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்: உயிரிழந்த சிறுவனின் வீட்டில் ஆடுகளின் ரத்த மாதிரி சேகரிப்பு

வியாழக்கிழமை, 9 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

கேரளாவில் நிபா பாதிப்பால் உயிரிழந்த சிறுவனின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சிறுவனுக்கு எவ்வாறு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. வவ்வால் மற்றும் பன்றி மூலம் மட்டுமே நிபா வைரஸ் பரவி வந்த நிலையில் சிறுவனின் வீட்டில் ஆடுகள் வளர்க்கப்படுவதால், அவற்றிற்கு பரிசோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டனர்.

ஆடுகளை மேய்க்க சிறுவன் சென்ற வனப்பகுதியில் வவ்வால்கள் இருப்பதால் அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சிறுவனின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன. அது மட்டுமின்றி சிறுவனின் வீட்டைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை கால்நடை பராமரிப்புத் துறையினர் சேகரித்துள்ளனர். 

இவை போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட உள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகளின் ரத்த மாதிரிகளை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து