மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில்: தமிழகத்தில் தயாராகும் உபகரணம்: மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தினார்

train-spare-2021-09-10

மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக தமிழகத்தில் தயாரான உபகரணத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

மும்பை - அகமதாபாத் அதி வேக ரயில் தட திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட புல் ஸ்பேன் லான்ச்சிங் எக்யுப்மென்ட்- ஸ்ட்ராடில் காரியர் மற்றும் கிர்டர் டிரான்ஸ்போர்டரை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் அறிமுகம் செய்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தற்சார்பு இந்தியா இயக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக 1100 மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்த உபகரணத்தை சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரத்தில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் வடிவமைத்து தயாரித்ததாக கூறினார். இதற்காக 55 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் எல் அண்டு டி கூட்டு சேர்ந்தது.

இத்தகைய உபகரணத்தை வடிவமைத்து தயாரிக்கும் இத்தாலி, நார்வே, கொரியா மற்றும் சீனாவின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அதிவேக ரயில்வே கட்டமைப்பை விரைந்து நிறுவ முடியும் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து