ஜேம்ஸ் வான் இயக்கும் திகில் படம்

Madison

பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் வான் ஏராளமான அதிரடி சண்டைகாட்சிகளைக் கொண்ட பிரம்மாண்ட திரைப்படங்களை உருவாக்கியவர். இவர் தற்போது ஒரு மாறுபட்ட கதையம்சம் கொண்ட ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என விரும்பி, வித்தியாசமாக நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ள படம் தான் இந்த மாலிகண்ட் என்ற திரைப்படம். இப்படத்தில், Annabelle Wallis, Maddie Hasson,  George Young, மற்றும் Michole Briana White ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Madison  என்ற ஓர் இளம் பெண் கொடூர கொலைகள் நிகழ்வதை தனது மனத்திரையில் அடிக்கடி காண்கிறாள். பின்னர் அவள் என்னவானாள் என்பதும் அவளுக்கு அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களுமே திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. James Wan, Ingrid Bisu மற்றும் Akela Cooper ஆகிய இருவரோடு இணைந்து, உருவாக்கிய இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் வான். இப்படத்தை Warner Bros. Pictures  நிறுவனம் உலக முழுவதும் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து