குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

Vijay-Roupani-2021-09-11

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாநில தலைநகரின் புறநகரில் உள்ள ரபாரி சமூகத்தின் (கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட வர்கள்) உறுப்பினர்களுக்காக அமைக்கப்படும் பயிற்சி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில்  கலந்து கொண்டு முதல் ரூபானி பங்கேற்றார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட ரபாரி சமூகத்தினரின் கூட்டத்தில் பேசிய விஜய் ரூபானி,  பசுக்களைக் காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் சட்டங்கள் உள்ளன. இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவதைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்த நிலையில், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குஜராத் முதல்வராக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த கட்சி தலைமை, பிரதமருக்கு நன்றி.  என்னை வழிநடத்திய கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய செயல்பாட்டுக்கு புதிய தலைமை தேவைப்படும். மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ.க. எப்போதும் வாய்ப்பு வழங்கி வருகிறது. குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என்று விஜய் ரூபானி கூறினார். 

 

அகமதாபாத்தில் கவர்னர் மாளிகை சென்ற அவர் கவர்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பா.ஜ.க. கட்சியை சேர்ந்த விஜய் ரூபானி, ஆனந்தி பென் படேலுக்கு பிறகு முதல்வரானார். பா.ஜ.க.வை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி 2016 முதல் குஜராத் முதல்வராக இருந்து வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து