10 மற்றும் 11-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆல்பாஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

Stalin 2020 07-18

10 மற்றும் 11-ம் வகுப்பு துணை தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

 

செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுகளை  தனித்தேர்வர்களாக  எழுத  விண்ணப்பித்துள்ள  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு  தற்போது  நிலவிவரும்  கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து  விலக்களித்து  அவர்கள்  அனைவரும்  தேர்ச்சி  பெற்றதாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து