கோவா, உ.பி. சட்டசபை தேர்தலில் சிவசேனா போட்டியிடும்: சஞ்சய் ராவத்

Sanjay-Rawat 2021 09 12

Source: provided

மும்பை: உத்தரப்பிரதேசம், கோவா சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடும். விவசாயிகள் அமைப்புகள் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள் என அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் கோவாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் உ.பியில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. தீவிரமாக பல்வேறு தலைவர்களை களமிறங்கி பணியைத் தொடங்கி விட்டது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 2 ஆண்டுகளாக உ.பி.யில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இது தவிர சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் என 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே உ.பி தேர்தலில் சிவசேனா கட்சியும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளது.

மும்பையில் சிவேசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,  உ.பி., கோவா மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை  தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிட உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 80 முதல் 100 இடங்களில் போட்டியிடும் கோவாவில் 20 இடங்கள் வரை போட்டியிடுவோம்.

உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி விவசாயிகள் சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஆதலால், உ.பி தேர்தலில் சிவசேனா கட்சி சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிடும். கோவா மாநிலத்தில் மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் அகாதி கூட்டணி போல், கோவாவில் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி தேர்தலைச் சந்திக்கும்.  இந்த இரு மாநில சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுகிறோமோ அல்லது தோல்வி அடைகிறோமோ ஆனால், தேர்தலில் போட்டியிடுவோம் எனத் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து