முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த கல்வியாண்டில் இருந்து ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் தனி ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம்

திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அடுத்த கல்வி ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒரு சதவீத தனி ஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது. இதேபோல், பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கேட்டு, இளையான்குடியைச் சேர்ந்த குறளரசன் உட்பட பலர் உயர் நீதி மன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு வழங்க மறுத்து தமிழக அரசு 2018-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, பணியில் உள்ள முப்படை வீரர்களின் வாரிசு களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார்.

இதை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தது.

இந்நிலையில், தற்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,797 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 15 சதவீத சீட்டுகள் மத்திய அர சின் ஒதுக்கீட்டுக்கு செல்லும். எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் வரும்.

தமிழகத்தில் ஓய்வுபெற்ற படை வீரர்களின் வாரிசுகளுக்கு 11 சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. இது போதுமானதாக இல்லை. ஆந்திரம், கர்நாடகம், கேரளா, தெலங்கானாவில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசு களுக்கு எம்.பி.பி.எஸ். சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன.

நாட்டின் நலனுக்காகப் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர் களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் குறைந்தது ஒரு சதவீத இடம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை பட்டியலில் இடம்பெறும் மொத்த இடங்களை, அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில், முன்னுரிமை பட்டியலை 12 வாரத்தில் மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும். தனி நீதி பதி உத்தரவில் தலையிட வேண்டிய தில்லை. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து