முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ' க்ரூஸ் ' ஏவுகணையை சோதித்தது வடகொரியா

திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பியாங்யாங்  ஜப்பானின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு க்ரூஸ் ஏவுகணையை வட கொரியா நேற்று பரிசோதித்து இருப்பதாக வடகொரியாவின் செய்தி முகமையான கே.சி.என்.ஏ உறுதிப்படுத்தியுள்ளது. இது சுமார் 1,500 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து தாக்கும் திறன் படைத்ததாம்.

ஏவுகணை சோதனை...

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா மீதான மோதலை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுத வல்லமை கொண்ட வடகொரியா தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. 

அச்சுறுத்தல்...

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவும் போதும், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. வடகொரியா தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

தென்கொரியா...

தங்களின் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. வடகொரியா சோதனை செய்த ஏவுகணை குறித்து, அமெரிக்க உளவு அமைப்புகளோடு இணைந்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஆலோசனை...

வடகொரியா அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து பேச உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

துல்லியமாக...

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தற்போது வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கி அதிர வைத்துள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக இந்த ஏவுகணை உள்ளது. 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து  கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவம்,  வடகொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து