காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி : குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்

Kashmir 2021 09 14

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள மெயின் சவுக் என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை குறிவைத்து அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசினர். இந்த தாக்குதலில்  பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மூன்று பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து