உள்ளாட்சி தேர்தலில் பலத்தை நிரூபிப்போம்: விஜயகாந்த்

Vijayakant 2021 09 14

Source: provided

சென்னை : வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தே.மு.தி.க. பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்.

தே.மு.தி.க. தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது.  ஆண்டுதோறும் கட்சியின் தொடக்க விழா கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கட்சி அலுவலகத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் திரண்டு இனிப்புகளை வழங்கினர். இதையொட்டி தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சி தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகிற தேர்தல்களில் நமது பலத்தை காட்டுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

தே.மு.தி.க. தொடங்கி 16 ஆண்டுகள் முடிடைந்து 17-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல. எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தே.மு.தி.க. பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். இவ்வாறு விஜயகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து