டி-20 உலக கோப்பை: பாக். அணி பயிற்சியாளர்களாக ஹேடன், பிலாண்டர் நியமனம்

Pakistan-New-Coach 2021 09

Source: provided

இஸ்லாமாபாத் : டி-20 உலக கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களாக ஹேடன், பிலாண்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய பயிற்சியாளார்...

வரும் அக்டோபர் மாதம் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி-20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் மற்றும் பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் வெர்னான் பிலாண்டர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். 

திடீர் விலகல்...

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக இயங்கி வந்த மிஸ்பா-உல்-ஹாக் மற்றும் வாக்கர் யூனிஸ் தங்கள் பதவியிலிருந்து அண்மையில் விலகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அனுபவ வீரர்கள்...

ஹேடன் சர்வதேச கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். மறுபக்கம் பிலாண்டர் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு பார்மெட்டுகளையும் சேர்த்து 265 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர்களது அனுபவம் பாகிஸ்தான் அணிக்கு டி20 உலகக் கோப்பையில் பெரிய அளவில் கைகொடுக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து