முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டியதாக 6 பயங்கரவாதிகள் கைது

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: reuters

புது டெல்லி : நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டியதாக 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) கொண்டாடப்படவுள்ளது. வடமாநிலங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது கூட்டம் அதிக அளவில் கூடுவது வழக்கம்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் குண்டுவெடிப்பை அரங்கேற்ற சிலர் சதி திட்டம் தீட்டியிருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ரகசியமாக மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 பேர் உள்பட 6 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் நீரஜ் தாக்குர், இணை கமிஷனர் பிரமோத் குஷ்வஹா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற நூல் சந்த் லாலா, அமீர் ஜாவீது ஆகிய 2 பயங்கரவாதிகள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து ஒருவரையும், டெல்லியில் இருந்து 2 பேரையும், உத்தரபிரதேசத்தில் இருந்து 3 பேரையும் கைது செய்துள்ளோம். இவர்களில் 2 பேர் மஸ்கட்டை சேர்ந்தவர்கள். பாகிஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டு ஏ.கே.47 ரக துப்பாக்கியை பயன்படுத்துதல் உள்ளிட்ட ஆயுத பயிற்சி 15 நாட்கள் அளிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற குழுவில் சுமார் 15 பேர் வங்கமொழியில் பேசியுள்ளனர். அவர்களுக்கும் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 2 குழுவாக பிரிந்துள்ளனர். ஒரு குழுவை தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் ஒருங்கிணைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து