பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க கவுன்சில் கூட்டம் : லக்னோவில் நாளை நடக்கிறது

Nirmala 2021 08 17

Source: provided

லக்னோ : லக்னோவில் நாளை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நாளை  வெள்ளிக்கிழமை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடுகிறது. கடந்த 20 மாதங்களில் முதல்முறையாக மாநில நிதி அமைச்சர்கள் நேரடியாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். கடைசியாக 2019-ம் ஆண்டு, டிசம்பர் 18-ம் தேதி நேரடியாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூடியது அதன்பின் இப்போது கூட உள்ளது.

நாளை நடக்கும் இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, அத்தியாவசியமான பொருட்கள். சிகிச்சைக்கான மருந்துப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவது குறித்து பேசப்படலாம். கடந்த ஜூன் 12-ம் தேதி காணொலி மூலம் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் பல்வேறு பொருட்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து