2-ம் பகுதி நாளை தொடக்கம்: ஐ.பி.எல்-லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 பவுலர்கள் விவரம்

IPL---Trophy-2021-09-17

ஐ.பி.எல்.லின் 2-ம் பகுதி போட்டிகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் இதுவரை இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 பவுலர்கள் பற்றி நாம் பார்ப்போம்.

நாளை தொடக்கம்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு சீசனின் 2-ம் பகுதி ஐ.பி.எல் போட்டிகள் தொடர இருப்பதால் எதிர்பார்ப்புகள் எகிறி இருக்கிறது. இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

30-வது லீக் போட்டி...

இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் 31 போட்டிகள் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 30-வது ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. 

டாப் 10 பவுலர்கள்... 

இதுவரை இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் நடப்பு சீசன் ஐ.பி.எல்லில் ரன்களை சேர்த்த டாப் 10 பவுலர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

1) ஹர்ஷல் படேல் - ஆர்.சி.பி: 7 போட்டிகள் 17 விக்கெட்டுகள். அதிபட்சமாக 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்.

2) அவேஷ் கான் - டெல்லி கேப்பிடல்ஸ்: 8 போட்டிகள் 14 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.

3) கிறிஸ் மோரிஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்: 7 போட்டிகள் 14 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.

4) ராகுல் சஹார் - மும்பை இந்தியன்ஸ்: 7 போட்டிகள் 11 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.

5) ரஷீத் கான் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 7 போட்டிகள் 10 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.

6) சாம் கரண் - சிஎஸ்கே: 7 போட்டிகள் 9 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.

7) பாட் கம்மின்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 7 போட்டிகள் 9 விக்கெட்டுகள் அதிகபட்சமாக 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.

8) கைல் ஜேமிசன் - ஆர்சிபி: 7 போட்டிகள் 9 விக்கெட்டுகள், அதிபட்சமாக 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.

9) தீபக் சஹார் - சிஎஸ்கே: 7 போட்டிகள் 8 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.

 

10 )முகமது ஷமி - பஞ்சாப் கிங்ஸ்: 8 போட்டிகள் 8 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து