Idhayam Matrimony

சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்

புதன்கிழமை, 31 டிசம்பர் 2025      தமிழகம்
EPS 2020 11-16

சென்னை, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆதரவு வாக்குகளில் ஒன்று கூட விடுபடக்கூடாது என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் பரீட்சைக்கு தயாராகி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை பா.ஜ.க., த.மா.கா .ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை உறுதி செய்தபோதிலும், தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையாக இரு தரப்பிலும் எதுவும் பேசவில்லை. ஆனால் இரு தரப்பிலும் சில மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

இதற்கிடையில் அண்மையில் சென்னை வந்த தமிழக பா.ஜ.க .தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வருகிற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அ.தி.மு.க.-பா.ஜனதா மற்றும் மற்ற கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாகவும் தகவல் வெளியானது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கு நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் அரசியல் களத்தில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மக்களை சந்தியுங்கள். கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். தி.மு.க. அரசு செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். எஸ்.ஐ.ஆர். பணிகளை கண்காணியுங்கள். அ.தி.மு.க. ஆதரவு வாக்குகளில் ஒன்று கூட விடுபடக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். மேலும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து