முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட கோலிக்கு கங்குலி - ராஜீவ் சுக்லா வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் என்று சவுரவ் கங்குலி கூறி உள்ளார். துணை தலைவர் ராஜீவ் சுக்லா அவரது தலைமையில் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். அதிக வேலை பளு காரணமாக 3 விதமான போட்டிகளிலும் தான் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று தெரிவித்துள்ள விராட் கோலி, இம்முடிவை மிகுந்த யோசனைக்கு பிறகு எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோலியின் முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சொத்து. தேவையான தருணத்தில் அணியை தன்னம்பிக்கையோடு வழிநடத்தக்கூடியவர். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டன்களில் அவரும் ஒருவர். இந்திய அணியின் எதிர்கால நலனை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.

20 ஓவர் அணியின் கேப்டனாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். அதன் பிறகும் அவர் இந்தியாவுக்காக நிறைய ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன்’ என்றார்.

 

துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி அளித்த பங்களிப்பு மகத்தானது. அதை ஒரு போதும் மறக்க முடியாது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது அவரது தனிப்பட்ட முடிவு. அதை நாங்கள் மதிக்கிறோம். அவரது தலைமையில் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து