மாநிலங்களுக்கு 78.02 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்

central-govt 2021 07 03

Source: provided

புது டெல்லி : நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மத்திய அரசு 78.02 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.  இதனை தொடர்ந்து கடந்த ஜூன் முதல் 18 வயது கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.  இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், 

நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 78.02 கோடி (78,02,17,775) கொரோனா தடுப்பூசி டோஸ்களை (இலவச அடிப்படையில்) வழங்கியுள்ளது. இதுதவிர, 33 லட்சம் டோஸ் தடுப்பூசிகளையும் (33,08,560) வழங்கவுள்ளது.  இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 6.02 கோடி (6,02,70,245) தடுப்பூசி டோஸ்களை கையிருப்பில் வைத்து உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து