முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 2 - ம் பகுதியை புதிய தொடரை போல் அணுகுவோம் சி.எஸ்.கே பயிற்சியாளர் பிளமிங் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: நாங்கள் இதை மற்றொரு தொடரை புதிதாக தொடங்குவதை போன்று அணுகுவோம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இது மற்றொரு தொடர் போன்றது என  சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

2-வது இடத்தில்...

ஐ.பி.எல். 2021 சீசன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டில் தோல்வியை சந்தித்தது. 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

பலப்பரீட்சை... 

மீதமுள்ள போட்டிகள் ஐ.பி.எல். 2-வது பகுதியாக நடத்தப்படுகிறது. நேற்று முதல் ஐ.பி.எல். போட்டிகள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சிறப்பாக... 

ஐ.பி.எல். 2-வது பகுதி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘வீரர்கள் கரீபியன் பிரிமீயர் லீக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய நிலையில் வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு வந்துள்ளனர். இது சிறப்பாக உள்ளது.

சிறந்த அனுபவம்... 

சிறந்த அனுபவம் மூலம் வந்துள்ளனர். அதன்பின் அனைவரும்  ஒன்றிணைந்துள்ளோம். ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாட நாங்கள் தயாரானது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். தொடரை எதிர்பார்த்து இருக்கிறேன். 

வெற்றி பெற... 

நாங்கள் மீண்டும் தொடரை சிறப்பாக தொடங்க விரும்புகிறோம். ஆனால், அதேபோல் பார்ம் உடன் விளையாட வேண்டும். வெற்றி பெற வேண்டும். இதை மனதில் வைத்து, வீரர்கள் ஒன்றிணைந்துள்ளார்கள். நாங்கள் இதை மற்றொரு தொடரை புதிதாக தொடங்குவதை போன்று அணுகுவோம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து