தொடரை ரத்து செய்த நியூசி.: பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த கிறிஸ் கெய்ல்

Chris-gayle

Source: provided

கரீபியன்: நியூசிலாந்து தொடரை ரத்து செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த கிறிஸ் கெய்ல்

பலத்த பாதுகாப்பு... 

பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி வீரர்கள் சென்றிருந்தனர். பலத்த பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு நியூசிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அச்சுறுத்தல்...

ராவல்பிண்டியில் முதல் போட்டி பகல்-இரவு ஆட்டமாக தொடங்க இருந்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்பு எச்சரிக்கை காரணத்தால், தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அணி அறிவித்தது.

மிகுந்த ஏமாற்றம்...

இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பாகிஸ்தான் வீரர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட்டை ரசிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியூசிலாந்து முடிவால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது. முன்னாள வீரர் இன்சமாம் உல் ஹக், ஐசிசி-யிடம் முறையிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை வலியுறுத்தியுள்ளார்.

பாக்.கிற்கு ஆதரவு... 

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாளை நான் பாகிஸ்தான் போகிறேன். என்னுடன் யார் வர்றீங்க’’ எனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிறிஸ் கெய்ல் இந்த பதவியை வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து