ரோகித் அடுத்த போட்டியில் கட்டாயம் விளையாடுவார் : பயிற்சியாளர் ஜெயவர்தனே நம்பிக்கை

Mahela-Jayawardene 2021 09

Source: provided

துபாய் : ரோஹித் சர்மா அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

விளையாடவில்லை...

சென்னைக்கு எதிரான 30-வது லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக ரோஹித் சர்மாவும் பாண்டியாவும் கலந்துகொள்ளவில்லை. பொலார்ட், மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். இருவருடைய நிலைமை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறியதாவது:

அவகாசம் தேவை... 

ரோஹித் சர்மா வழக்கமான பேட்டிங் மற்றும் ஓட்டம் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இங்கிலாந்திலிருந்து தற்போதுதான் அவர் திரும்பியதால் மீண்டும் விளையாட சிறிது அவகாசம் தேவை என நினைத்தோம். எனவே அடுத்த ஆட்டத்தில் அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும். 

பிரச்னை இல்லை... 

பாண்டியா பயிற்சி எடுத்துக்கொண்டார். அதில் அவருக்கு லேசாக வலி ஏற்பட்டதால் சில நாள்கள் அவகாசம் அளித்துப் பார்க்கலாம் என முடிவெடுத்தோம். பெரிய அளவில் பிரச்னை இல்லை என்றார். எனினும் பாண்டியா அடுத்த ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் என அறியப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து