முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

36-வது லீக் - ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம்

சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிப் பெற்றது. மேலும், புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது.

டேவிட் மில்லர்...

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 36-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணியில் உலகின் நெ.1 டி-20 பந்துவீச்சாளரான ஷம்சியும் டேவிட் மில்லரும் இடம்பெற்றனர். டெல்லி அணியில் ஸ்டாய்னிஸுக்குப் பதிலாக லலித் யாதவ் இடம்பெற்றார்.

டெல்லி அணி: 

பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹெட்மயர், லலித் யாதவ், ஏஆர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்ட்ஜே, அவேஷ் கான்

ராஜஸ்தான் அணி:  

ஜெய்ஸ்வால், சாம்சன், லிவிங்ஸ்டன், மில்லர், லோம்ரர், பராக், தேவாதியா, கார்த்திக் தியாகி, சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷாம்சி.

டெல்லி பேட்டிங்...

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ப்ரித்வி ஷா மற்றும் சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தவான் - ப்ரிதிஷா...

8 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் ராஜஸ்தான் வீரர் கார்த்திக் தியாகி பந்து வீச்சில் வெளியேறினார். ப்ரித்வி ஷா 10 ரன்கள் எடுத்த நிலையில் சேதன் சகரியா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி டெல்லி அணியின் ரன் வேகத்தை வெகுவாக உயர்த்தியது. நிதனாமாக ஆடிய ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

ஷ்ரேயாஸ் அதிரடி...

அதிரடியாக ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தெவாட்டியா பந்து வீச்சில் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷெம்ரான் ஹிட்மயர் 28 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.  ராஜஸ்தான் அணியின் ரஹ்மான் மற்றும் சகரியா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

தொடக்கமே அதிர்ச்சி...

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த டேவிட் மில்லரும் 7 ரன்களில் அவுட்டானார். இதனால் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே களத்தில் நிற்க பின் வந்த லோம்ரோர் மற்றும் ரியான் பராக் ஆகியோரும் விரைவில் அவுட்டானார்கள்.

சாம்சன் அபாரம்...

ஆனால் கேப்டன் சாம்சனுடன் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா ஸ்டிர்க்குகளை அற்புதமாக ரொடேட் செய்தார். இதனால் சாம்சனுக்கு அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பவுண்டரிகளாக மாற்றினார். பின்பு அரை சதமடித்த அவர் எப்படியாவது ராஜஸ்தானை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என போராடிக்கொண்டிருந்த நேரத்தில் ராகுல் டெவாட்டியா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்பு பந்துக்கும் ரன்னுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்தது. 

சஞ்சு சாம்சன் மட்டுமே இறுதி வரை ஆட்டமிழக்காமல் போராடிக்கொண்டிருக்கு 20 ஓவர் முடிவில் ராஜஸ்தானால் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சஞ்சு சாம்சன் 53 பந்துகளில் 70 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி.

மீண்டும் முதலிடம்...

இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தானை வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணியின் பிளேஆப் சுற்று மேலும் பிரகாசமாகியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து