முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலோசகரானார் ஜெயவர்தனே

சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டி-20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி-20 உலகக் கோப்பையில் விளையாடும் இலங்கை அணியின் ஆலோசகராக முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல் அணியின் பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் போட்டி முடிந்த பிறகு டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இலங்கை அணியினருடன் ஜெயவர்தனே இணைந்துகொள்வார். மேலும் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள யு-19 உலகக் கோப்பைப் போட்டிக்கான இலங்கை அணியின் ஆலோசகராகவும் ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

____________

பார்க்காமலேயே அடித்த சிக்ஸர்

ஐ.பி.எல் தொடரின் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸின் 4-வது ஓவரை சென்னை அணிக்காக ஷர்துல் தாக்கூர் வீசினார். ஓவரின் நான்காவது பந்தை கோலி, நின்ற இடத்திலிருந்து சிக்ஸருக்கு விரட்டினார்.

இந்த ஷாட்டின்போது பந்து செல்லும் திசையை கோலி பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் பந்து 82 மீட்டர் பறந்துசென்று மைதானத்துக்கு வெளியே விழுந்தது. கோலியின் அசாத்திய பேட்டிங் காரணமாக இது குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

_____________

புழுதிப் புயல் -  ஓடிய வீரர்கள்

சார்ஜாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சி மேற்கொண்டிருந்தபோது புழுதிப்புயல் தாக்கியதன் காட்சிகளை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.சென்னை, பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டது. இதனால் 15 நிமிடங்கள் தாமதாமாக போட்டி தொடங்கியது. 

இந்நிலையில் ஷார்ஜாவில் முகாமிட்டுள்ள ராஜஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புழுதிப்புயல் அவ்வழியே கடந்து செல்லவே வீரர்கள் அனைவரும் அவசர அவசரமாக மைதானத்தின் உடை மாற்றும் அறைக்கு திரும்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து