முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 26 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபு தாபி: அபுதாபியில் நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. இந்த ஆட்டம் கடைசி ஓவர் வரை நீடித்ததால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை ஆட்டி படைத்தது என்றே சொல்லாம்.

38-வது லீக் ஆட்டம்...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று 2 ஆட்டங்கள் நடைப்பெற்றன. மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

2-வது இடத்தில்...

நேற்றைய போட்டிக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஆட்டத்தில் 7 வெற்றி, 2 தோல்வி பெற்று 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பிளே-ஆப் சுற்றையும் உறுதி செய்து, புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது உள்ளது. 

பேட்டிங் தேர்வு... 

அபு தாபியில் 38-வது லீக் ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.  கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

கொல்கத்தா அணி...

ஷூப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், வரண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

சென்னை அணி...

ருதுராஜ், டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், டோனி (கேப்டன்), ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.

கொல்கத்தா பேட்டிங்...

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சாம் கர்ரன் இடம் பெற்றார். கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ருதுராஜ் - டூப்ளசிஸ்... 

ருதுராஜ் - டூப்ளசிஸ் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் சேர்த்தனர். ருதுராஜ் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் மொயின் அலி களத்திற்கு வந்தார். 12-வது ஓவரில் சென்னை 102 ரன்கள் எடுத்த நிலையில் டூப்ளசிஸ் வெளியேறினார். அவர் 30 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து வெளியேறினார். 

திருப்பு முனை...

தொடர்ந்து ராயுடு, மொயின் அலி, ரெய்னா, டோனி என விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது. கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி வீழ்த்திய 18-வது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடைசி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் சென்னை அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது பந்து வீச வந்தார் வருண். முதல் பந்தில் ரெய்னா ரன் அவுட். 3-வது பந்தில் டோனி போல்டானார். அதோடு அந்த ஓவரில் வரும் ஐந்து ரன்களை தான் அவர் கொடுத்திருந்தார். 

கடைசி ஓவர்...

ஆனால் பிரசித் கிருஷ்ணா அதற்கடுத்ததாக வீசிய 19-வது ஓவரில் சென்னை 22 ரன்களை எடுத்தது. ஜடேஜா இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அந்த ஓவரில் விளாசி இருந்தார்.  கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சென்னை அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை சுனில் நரைன் வீசினார். இவர் சூப்பர் ஓவரில் மெய்டன் வீசியவர். அதே போலவே முதல் பந்தில் சாம் கரனை அவுட் செய்தார். அடுத்த பந்து டாட். ஸ்ட்ரைக்கில் தாக்கூர். மூன்றாவது பந்தில் மூன்று ரன்கள். கடைசி மூன்று பந்தில் ஒரு ரன் தேவைப்பட ஜடேஜா ஸ்ட்ரைக்கில் இருந்தார். நான்காவது பந்து டாட். ஐந்தாவது பந்தில் ஜடேஜா அவுட். எல்.பி.டபுள்யு முறையில் அவர் வெளியேறினார். 

தொடர்சியாக...

தீபக் சஹார் களமிறங்கினார். வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை எடுத்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை 2-வது பாதி ஆட்டத்தில் தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு அமீரகத்தில் சென்னை தொடர்ச்சியாக பெற்றுள்ள 6-வது வெற்றி இது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

BOX - 1

டூப்ளசிஸ் பிடித்த கேட்ச்

பத்தாவது ஓவரின் முதல் பந்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், லாங்-ஆன் திசையில் பெரிய ஷாட் ஆட முயன்றிருப்பார். அந்த பகுதியில் ஃபீல்டிங்கை கவனித்துக் கொண்டிருந்த டூப்ளசிஸ் அதை லாவகமாக கேட்ச் பிடித்து மோர்கனை வெளியேற்றி இருப்பார். பவுண்டரி லைனுக்கு அருகே மிகவும் நேர்த்தியாக பேலன்ஸ் செய்து அந்த கேட்சை எடுத்திருந்தார் அவர். 

அப்போது அவரது இடது காலின் மூட்டுப் பகுதியில் ரத்தம் வழிந்திருந்தது தெரியவந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அவர் விளையடினார். களத்தில் ஃபீல்ட் செய்த போது அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த ஆட்டதில் 30 பந்துகளில் 43 ரன்களை குவித்து அவர் அவுட்டாகி உள்ளார்.  பவுண்டரி லைனில் கேட்ச் பிடிப்பதில் டூப்ளசிஸ் சிறந்தவர் என ரசிகர்கள் அவரை சமூக வலைத்தள பக்கங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து