எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

MR-Vijayabaskar 2021 09 28

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சொல்லி லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சோதனை நடத்தினர்.

கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீடு, விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இச்சோதனையில், கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆவணங்களைப் பறிமுதல் செய்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீத சொத்துகளைச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கலில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாகத் தெரிவித்தவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்தபோது வரவு-செலவுகளை ஆராய்ந்ததில், இந்தத் தகவல் வெளிவந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், சொத்துக் குவிப்பு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சொல்லி, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை 30-ம் தேதி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, அவரது மனைவி மற்றும் சகோதரருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து