முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

' கொரோனா ' பாதித்தவர்களை வீட்டில் தனிமை படுத்தக்கூடாது: சென்னை கமி‌ஷனர் புதிய உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன் படி சென்னையில் ' கொரோனா ' பாதித்தவர்களை வீட்டில் தனிமை படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 ஆயிரத்து 467 பேர் பலியாகி விட்டனர். 5 லட்சத்து 38 ஆயிரத்து 745 பேர் குணமடைந்து விட்ட நிலையில் 2 ஆயிரத்து 58 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. 180 முதல் 220 வரை தினசரி பாதிப்பு பதிவாகிறது.

இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் பதிவாவதற்கு மார்க்கெட்டுகளில் அதிகமாக கூடுதல், நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவையே காரணம். கொரோனா பாதித்த பலர் வீட்டு தனிமையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால் ஒரே வீட்டில் நான்கைந்து பேர் தொற்றுக்கு ஆளாகிறார்கள். மேலும் கொரோனா தொற்று இருந்தும் வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கும் பரவுகிறது. 

எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தக் கூடாது. உடனே ஆஸ்பத்திரியில் சேர வேண்டும். 14 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். கட்டாயம் வீட்டு தனிமை வேண்டுவோரின் வீடுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள். 

 

தனியறை, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்த்து அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள். அவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து