முக்கிய செய்திகள்

சிறிப்பான ஆட்டத்தை இன்னும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை: சொல்கிறார் மும்பை கேப்டன் ரோகித் சர்மா

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      விளையாட்டு
Rohit-Interview-2021-09-29

தற்போது வரை நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று முமபை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 136 ரன் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணியால் கஷ்டப்பட்டுதான் எட்ட முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது. மிகக்குறைந்த இலக்காக இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் எளிதாக அடிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

சிறந்த ஆட்டத்தை...

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது., நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இது நீண்ட தூரம் கொண்ட தொடர். நாங்கள் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். சூழ்நிலையை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அதில் இருந்து ஏராளமான உறுதியை பெற முடியும்.

முக்கியமானது...

 

ஹர்திக் பாண்ட்யா சூழ்நிலையை புரிந்து கொண்டது அணியின் பார்வையில் அது மிகவும் முக்கியமானது. காயத்திற்குப் பிறகு அவர் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியது அவருக்கும் முக்கியமானது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து