முக்கிய செய்திகள்

மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை துவக்கம்

வெள்ளிக்கிழமை, 1 அக்டோபர் 2021      தமிழகம்
spicejet-2021-10-01

மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை துவங்கியது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களாக மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அளித்து வரும் நிலையில், நேற்று முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியுள்ளது.

இதற்காக பயணிகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக, நேற்று காலை 11.50 மணியளவில் துபாய் செல்ல 175 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும், சான்றிதழ் உள்ள பயணிகள் மட்டுமே விமானத்தில் அனுமத்திக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் உள்ள பயணிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் கடந்த ஆறு மாதங்களாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த நிலையில் நேற்று முதல் தனது வெளிநாட்டு விமான சேவையை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

 

வாரம்தோறும் துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் காலை 9.20 மணிக்கு விமானம் வரும் என்றும், அதேபோல் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மதுரையிலிருந்து துபாய்க்கு காலை 11.50 மணிக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து