முக்கிய செய்திகள்

டிசம்பர் இறுதிக்குள் தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி : பிரதமர் நரேந்திர மோடி உறுதி

Modi 2020 12 18

Source: provided

புதுடெல்லி : டிசம்பர் இறுதிக்குள் அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றும், தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி பெற்றதற்கு இந்தியாவின் சுய சார்பு கொள்கை தான் காரணம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி கூறியிருப்பதாவது., தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.என்ன சூழல் நிலவி இருக்கும்? உலகின் பெரும்பாலான மக்கள் தொகைக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை. 

இன்று, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறோம் என்றால் அது சுய சார்பு கொள்கையால்தான். நாட்டின் வயதுவந்த மக்களில் 69 து சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளனர். 25 சதவிகிதம் பேர்  2-வது தவணையை எடுத்துள்ளனர். 

டிசம்பர் இறுதிக்குள் அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார். மேலும், ஒரு பிரச்சினை குறித்து முழுமையாக ஆய்வு செய்ய  நேரம் இல்லாத காரணத்தால் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே பெரும்பாலானோர்  முன்வைப்பதாகவும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து