முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ரா சாதனை முறியடிப்பு: ஐ.பி.எல்.லில் புதிய மைல்கல்லை தொட்டார் ' ஹர்ஷல் பட்டேல் '

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் ஹர்ஷல் பட்டேல்.

29 விக்கெட்... 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் ஹர்ஷல் பட்டேல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இந்த சீசனில் 29 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 

பும்ரா சாதனை...

பும்ரா கடந்த சீசனில 27 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இதுதான் ஒரு சீசனில் இந்திய பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய அதிக விக்கெட்டாக இருந்தது. தற்போது ஹர்ஷல் பட்டேல் இந்த சாதனையை முறியடித்துள்ளார். ஆர்.சி.பி. இன்னும் ஒரு லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து