முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 கிரிக்கெட்டில் அணியை கேப்டனாக வழிநடத்தியவர்களில் டோனிக்கு முதலிடம்

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : டி - 20 கிரிக்கெட்டில் அணியை கேப்டனாக வழிநடத்தியவர்களில் டோனி முதலிடத்தில் உள்ளார். அவர் கேப்டனாக 300 போட்டிகளில் இதுவரை அணியை வழிநடத்தியுள்ளார். 14-வது ஐ.பி.எல். போட்டி அவர் வழிநடத்திய 300வது போட்டியாகும்.

நடப்பு ஐ.பி.எல் சீசனின் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் நேற்று விளையாடின. டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக டோனி பங்கேற்கும் 300-வது போட்டி. அதோடு ஒன்பதாவது முறையாக சென்னை அணியை இறுதிப் போட்டியில் வழிநடத்துகிறார் டோனி. 

சக்சஸ் ரேட்... 

டி20 கிரிக்கெட்டில் டோனி கேப்டனாக அணியை வழிநடத்தினால் 59.79 வெற்றி வாய்ப்பை உறுதி செய்வார் என அவரது சக்சஸ் ரேட் சொல்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை கேப்டனாக 72 டி20 போட்டிகளில் வழிநடத்திய டோனி 41 வெற்றிகளையும், 28 தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஒரு போட்டி சமனிலும், இரண்டு போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. 

130 வெற்றிகள்...

டோனி தலைமையிலான சென்னை அணி 213 போட்டிகளில் விளையாடி 130 வெற்றிகள், 81 தோல்விகளை தழுவியுள்ளது. புனே அணிக்காக 14 போட்டிகளில் கேப்டனாக டோனி செயல்பட்டுள்ளார். அதில் 5 வெற்றிகள், 9 தோல்விகளை அந்த அணி சந்தித்துள்ளது. டி20 போட்டிகளில் அணியை அதிக முறை வழிநடத்திய கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் டோனி தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து