முக்கிய செய்திகள்

பாலியல் குற்றங்களுக்கு எதிரான அகடு

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      சினிமா
John-Vijay 2021 10 17

Source: provided

சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் சார்பட்டா பரம்பரை புகழ் "டாடி" ஜான் விஜய், அஞ்சலி நாயர்,சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

புதுமுக இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார். கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் ஒரு கொடூர செயல் அரங்கேறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து