முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக ரன்கள் குவிக்காததால் ஸ்காட்லாந்திடம் தோல்வி : வங்கதேச அணி கேப்டன் விளக்கம்

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : நடு ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்காததால் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்ததாக வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியுள்ளார்.

6 ரன் வித்தியாசத்தில்....

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியைத் தோற்கடித்தது ஸ்காட்லாந்து.  முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

அமையவில்லை... 

ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்தது பற்றி வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியதாவது., ஆடுகளம் நன்றாக இருந்தது. 140 ரன்களை எடுத்திருக்க முடியும். நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய ஒரு பெரிய ஓவர் எங்களுக்கு அமையவில்லை. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஆனால் பேட்டிங் குழு சரியாக விளையாடவில்லை. 

தவறு செய்தோம்... 

ஸ்காட்லாந்து அணியை 53/6 என்கிற நிலைக்குக் கொண்டு சென்ற பிறகு நாங்கள் ஆர்வத்தை இழக்கவில்லை. ஒரு விக்கெட் எடுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஸ்காட்லாந்து பேட்டர்கள் சிறப்பாக விளையாடி அந்த ஸ்கோரை எடுத்தார்கள். 140 ரன்களை விரட்ட முடியவில்லையென்றால் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய வேண்டும். அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து