முக்கிய செய்திகள்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

புதன்கிழமை, 20 அக்டோபர் 2021      வர்த்தகம்
Gold 2021 07 01

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்தது. 

 

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த 16-ந்தேதியில் இருந்து அதன் விலை தொடர்ந்து சரிந்து, ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.  இந்நிலையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,474-க்கு விற்பனையானது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.35,792-க்கு விற்பனையானது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து