முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் சொந்தமாக சமூக வலைதளம் தொடங்கிய டொனால்ட் ட்ரம்ப்

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக சமூக வலைதளம் தொடங்கியுள்ளார். ட்ரூத் சோஷியல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வலைதளத்தின் பீட்டா லான்ச் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

ட்ர்ம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் என்ற நிறுவனம் சார்பில் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளம் வெளியாகிறது. இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில், "நான் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தைத் தொடங்கியுள்ளேன். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அடாவடித்தனத்துக்கு சவால்விடும் வகையில் இதனைத் தொடங்கியுள்ளேன். சமூக வலைதளங்களில் தலிபான்கள் அதிகளவில் இருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபருக்கு இடமில்லை. நான் ப்ளாக் செய்யப்பட்டேன். இது ஏற்புடையதல்ல" என்று கூறினார்.

 

கடந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். சில வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. இதனால், ட்ரம்ப்பை பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து மே மாதம் ட்ரம்ப் ஒரு ப்ளாக் (வலைப்பூ) தொடங்கினார். அதற்கு "From the Desk of Donald J. Trump" எனப் பெயரிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து