முக்கிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 231 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      இந்தியா
Corona 2021 07 21

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக மேலும் 15,786 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 231 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு., கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 15,786. இதில் கேரளாவில் மட்டும் 8,733 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 34,143,236. இதுவரை குணமடைந்தோர்: 33,514,449. கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 18,641. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 231. இதில் கேரளாவில் 118 பேர் உயிரிழப்பு. கொரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,52,651.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,75,745. இது கடந்த 232 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. இதுவுரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 100.59 கோடி. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.16% ஆக உள்ளது. இது கடந்த மார்ச் 2020க்குப் பின்னர் மிகவும் அதிகமான விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதன் அளவீடு. தினசரி பாசிடிவிட்டி ரேட் 1.19% ஆக உள்ளது. இதுவும் கடந்த 53 நாட்களாக 50%க்கும் கீழ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து