முக்கிய செய்திகள்

ஜம்முவில் ஐ.ஐ.டி.-யின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார் மத்திய மந்திரி அமித்ஷா

Amitsha 2021 10 24

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்முவில் ஐ.ஐ.டி.-யின் புதிய வளாகத்தை மத்திய மந்திரி அமித்ஷா திறந்து வைத்தார். 

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அங்கு வசித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.எனவே பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் அங்கு முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதனால் காஷ்மீரில் தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் அரசுமுறை பயணமாக காஷ்மீர் சென்றார். அங்கு கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தபின் காஷ்மீருக்கு அமித்ஷா மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமித்ஷா, நேற்று ஜம்மு சென்றார்.  ஜம்மு ஐ.ஐ.டி.யில் புதிய வளாகத்தை திறந்து வைத்தார். அதன்பின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து