எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமை செயலாளர் வெ. இறையன்பு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது.,
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின் நிறுவனம்) தினம் சராசரியாக 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளுர் விற்பனை போக, 27 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலாகவும், மீதமுள்ள ஆவின் பால் உப பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர் மற்றும் பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட், ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உயர்ந்த தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
மேலும் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்து வருகின்றது. அவ்வகையில் 2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.10.2021 அன்று புதிய இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளாகும். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யும் பொருட்டு, தங்கள் துறை சார்ந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தங்கள் துறை சார்பில் எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், தங்கள் துறை சார்ந்த அலுவலகக் கூட்டங்களில் இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025