முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 ஆண்டுகளுக்கு முன் காசியில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணா தேவி சிலை இந்தியாவிடம் கனடா ஒப்படைப்பு

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

100 ஆண்டுகளுக்கு முன் காசியில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி சிலை கனடாவிடம் இருந்து மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த போது, வாரணாசியிலிருந்து அன்னபூர்ணா தேவி சிலை கனடாவுக்கு கடத்தப்பட்டது, நார்மென் மெக்கென்ஸி என்பவரால் உருவாக்கப்பட்ட கலைக்கூடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது.

வாரணாசியிலிருந்து கடந்த 1913-ம் ஆண்டு மெக்கென்ஸியால் இந்த சிலை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளரும், கலைஞருமான மேஹ்ரா தெரிவித்துள்ளார். இந்த சிலை வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு கோயிலிருந்து திருடப்பட்டு மெக்கென்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் எனத் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

பீடத்தில் அமர்ந்த நிலையில் கையில் பெரிய கிண்ணத்தையும் மற்றொரு கையில் அன்னம் வழங்கும் கரண்டியும் வைத்திருப்பது போன்று தேவி சிலை அமைந்துள்ளது. வாரணாசியில் இன்றும் கங்கைநதிக் கரைஓரத்தில் அன்னப்பூர்ணா தேவி கோயில் அமைந்துள்ளது.  சமீபத்தில் இந்தியக் கலைஞரும் ஆய்வாளருமான திவ்யா மேஹ்ரா இந்த சிலையை அடையாளம் கண்டு அதுகுறித்து ஆய்வு நடத்திய போது, 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இந்த சிலை எடுக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.

இதையடுத்து, ரெஜினா பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் தலைவரும், துணை வேந்திருமான டாக்டர் தாமஸ் சேஸ், கனடாவுக்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியாவை காணொலி மூலம் சந்தித்து பேசி இந்த சிலை குறித்த விவரத்தை தெரிவித்தார்.  இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்கும் அன்னபூர்ணா தேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைக்க கனடா முன்வந்தது.

இந்தநிலையில் 100 ஆண்டுகளுக்கு முன் காசியில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி சிலை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், 

 

100 ஆண்டுகளுக்கு முன் காசியில் அன்னபூரணி சிலை திருடப்பட்டது. இது கனடாவில் உள்ள ஒரு பல்கலைக் கழக அருங்காட்சியகத்தில் இருந்தது. பல்கலைக் கழகத்திடம் இருந்து இந்திய அரசு அந்த சிலையைப் பெற்றுள்ளது. அது இப்போது உத்தரபிரதேச அரசுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் அது காசிக்கு கொண்டு வரப்படும் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து