Idhayam Matrimony

தலைவர்களே செயலில் ஈடுபட தொடங்குங்கள்: பருவநிலை மாநாட்டில் தமிழக மாணவி பேச்சு !

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த பருவ நிலை மாநாட்டில் பேசிய தமிழக மாணவி, தலைவர்களே செயலில் ஈடுபட தொடங்குங்கள் என்று பேசினார். 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த பருவநிலை மாநாட்டில், காடுகள் மற்றும் நிலம் பயன்பாடு தொடர்பாக இங்கிலாந்து ஏற்பாட்டில் தனி அமர்வு நடைபெற்றது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், 2030-ம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான பிரகடனத்தில் சீனா, பிரேசில் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன.

மாநாட்டில் நிகழ்வு ஒன்றில்  கலந்து கொண்டு பேசிய தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி வினிஷா உமாசங்கரின் உரை அனைவரையும் கவர்ந்து.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா உமாசங்கர்.  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை  உருவாக்கி கவனம் பெற்றவர் வினிஷா. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்   தொடங்கிய எர்த்ஷாட் விருதுக்கான இறுதிப்போட்டிக்கு தேர்வானவர்களில் வினிஷாவும் ஒருவர்.

மாநாட்டில்  தூய்மை தொழில்நுட்பம் குறித்து  பேச வினிஷாவுக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில் மாநாட்டில் பேசிய வினிஷா கூறியதாவது:-

இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். பேசுவதை நிறுத்தி விட்டு செயலில் ஈடுபடத் தொடங்குங்கள்.  புதைபடிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபாடு ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு பதிலாக எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களான  எங்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.  

பழைய விவாதங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை. எனவே எங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும். எங்களுடன் சேர உங்களை அழைக்கும் போது, ​​நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். ஆனால் தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

 

எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். மேலும் நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. எனக்கு செயல்பாடு முக்கியது. நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியைச் சேர்ந்த பெண்ணும் தான்.  நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து