முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலம்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நரினோ மாகாணத்தின் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக நேற்று முன்தினம் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், வீடுகளில் வசித்து வந்த பலர் மண்ணுக்குள் புதைந்தனர். 

 

இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 20 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து