முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குத்துவிளக்கேற்றி மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய அதிபர் ஜோ பைடன்

வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோபைடன் தனது மனைவியுடன் குத்துவிளக்கேற்றி தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார்.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.  இந்த நிலையில் அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்,  தனது மனைவியுடன் வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டார். அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் குத்துவிளக்கேற்றும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அதன் பின்னர் ஜோ பைடன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நமக்கு நினைவூட்டட்டும். அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து