முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா மற்றும் தனது நோக்கம் அ.தி.மு.க.வை மீட்பதுதான்! எடப்பாடி பலவீனமாக உள்ளதாகவும் தினகரன் பேட்டி

சனிக்கிழமை, 6 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பலவீனமடைந்து விட்டதாகவும், அதனால் தான் வார்த்தைகளை பயந்து பயந்து பயன்படுத்துவதாகவும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தின் இடையே அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

சசிகலா மற்றும் தனது நோக்கம் ஒன்றே என்றும் அது அ.தி.மு.க.வை மீட்பது தான். எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருப்பதாகவும், அதனாலேயே வார்த்தைகளை பயந்து பயந்து பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

தொண்டர்களின் மனநிலை பற்றியே தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பது வழக்கம். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் பலவீனம் அடைந்து விட்டார் என்று டி.டி.வி. தினகரன் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே தெரிவித்து இருப்பதாக கூறினார். 

மேலும் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும் கூட்டத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் தோல்விகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து