முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 30-ம் தேதிக்கு பிறகு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நீடிக்கப்படாது: மத்திய அரசு

சனிக்கிழமை, 6 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் வருகிற 30-ந் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து, ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன்கீழ், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.

முதலில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி, வருகிற 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இப்பணி நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியதாவது:-

 

தற்போது பொருளாதாரம் மீண்டு வருகிறது. வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்கும் அளவுக்கு உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக உள்ளது. அந்த அளவுக்கு அரிசி, கோதுமையை வினியோகித்துள்ளோம். எனவே, வருகிற 30-ந் தேதிக்கு பிறகு இலவச உணவு தானியம் வழங்கும் பணி நீட்டிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து