முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக் பயன்படுத்தும் போதெல்லாம் கன்னத்தில் அரைவதற்காக ஆள் நியமித்த அமெரிக்க இந்தியர்

வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன்: பேஸ்புக் பயன்படுத்தும் போதெல்லாம் கன்னத்தில் அரைவதற்காக இளம்பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார் அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர். 

அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவரான மனீஷ் சேதி பாவ்லோக் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இணையதள பக்கம் ஒன்றின் மூலமாக அண்மையில் காரா என்ற இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார். பலருக்கும் ஆச்சரியம் தரும் இந்த வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 500 ரூபாய் சம்பளம் ஆகும். மனீஷ் சேதி எப்போதெல்லாம் பேஸ்புக் பக்கத்திற்கு நுழைகிறாரோ, அப்போது கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விடுவது தான் காராவுக்கு வேலை.

பேஸ்புக்கில் வீணாக பொழுது போக்குவதை தவிர்த்தால் வேலையில் கூடுதலாக கவனம் செலுத்த முடியும் என்பதற்காகவே மனீஷ் சேதி இப்படி வேலைக்கு ஆள் எடுத்துள்ளார். உண்மையில் காராவை வேலைக்கு அமர்த்திய பின்னர் உற்பத்தி திறன் 40 சதவீதத்தில் இருந்து 98 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக மனீஷ் கூறுகிறார். இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. 

இதனை பகிர்ந்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், 2 ஸ்மைலியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதே சமயம் மனீஷ் சேதிக்கு கன்னத்தில் அறை வாங்குவது ஒன்றும் புதிதல்ல ஓய்வு நேரத்தில் யாரையாவது கத்த சொல்வதும் கன்னத்தில் அரைய சொல்வதுமே பொழுது போக்கு போல வைத்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!