முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா 4-வது அலை ஆரம்பம்: ஜெர்மனியில் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் மீண்டும் அமலானது

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெர்லின் : ஜெர்மனியில் கொரோனா 4-வது அலை ஆரம்பமானதால் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் அங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கொரோனா கட்டுக்குள் வந்ததால் கடந்த ஜூலை மாதம் முதல் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதற்கு முன்பு வரை வீட்டில் இருந்தே பணி செய்யும் முறை அங்கு அமலில் இருந்தது. ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில் மீண்டும் அங்கு தொற்று அதிகமாகி இருக்கிறது.

ஏற்கனவே 3 அலைகள் ஜெர்மனியை தாக்கி இருந்தன. இப்போது 4-வது அலை தாக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் மத்தியில் இருந்து 4-வது அலை தாக்குதல் தொடங்கி இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஜெர்மனியில் ஒரு லட்சம் பேரில் 289 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 4-வது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணித்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே கொரோனா கட்டுக்குள் வந்ததால் கடந்த ஜூலை மாதம் முதல் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதற்கு முன்பு வரை வீட்டில் இருந்தே பணி செய்யும் முறை அங்கு அமலில் இருந்தது. அதுவும் ஜூலை மாதம் தளர்த்தப்பட்டது. இப்போது 4-வது அலை ஏற்பட்டு இருப்பதால் மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை தொடங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட இருக்கிறது.

ஜெர்மனியில் 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனாலும் கூட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது அந்த நாட்டு அரசை கவலைக்கொள்ள செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!